சனி, 27 ஜூலை, 2013

எடுத்துவிடு - Others

எடுத்துவிடு 
 

என் பார்வைகளை.. 
பிடிக்காமலா 
நீ 
அந்த.. 
புத்தகங்களை 
சுமந்துசெல்கிறாய் 
உன் 
கரங்களை எடுத்துவிடு 
நான் 
அவைகளை பிடித்துக்கொள்கிறேன்

கல்லாய்ப்போனாய் - Others

கல்லாய்ப்போனாய் 
 

நீ பூஜைக்குச் 
செல்லத்தேவையில்லை 
அங்கு 
தெய்வத்தை காணவில்லை 

அர்ச்சனைக்குப் பறித்த 
மலர்களை 
உன் பாதத்தில் 
கொட்டிவிடுகிறேன் 
நீ 
கோவிலுக்குச் செல்லவேண்டாம் 

எத்தனை மாலைகளில் 
உன் 
முற்றத்து மாமரம் 
என்னைப் பார்த்து 
சிரித்திருக்கிறது 
நீ..ஏன் 
இன்னும் சிரிக்கவில்லை 

நீ.. 
கோவிலில் ஏன் 
கல்லாய்ப்போனாய்.

கண்ணடி பட்டு - Others

கண்ணடி பட்டு 
 

காற்றில் கலைந்ததுவோ 
காஞ்சிபுரப்பட்டு 
கசங்கிப்போனதுவோ 
கண்ணடிபட்டு.


வியாழன், 25 ஜூலை, 2013

காயம் - Others

காயம் 
 

உரியப்படாத 
துகில்களால் 
சிலர் 
உரசிக்கொண்டேஇருக்கிறார்கள் 
ஆண்டுகளுக்கும் 
சவால்விட்டவர்களாய் 

இருட்டிக்கொண்டகண்களோ 
ஏமாந்துவிடுகிறது 
காயப்ப்டாதவரை

திங்கள், 22 ஜூலை, 2013

ஏழை 
 

நாங்கள் 
வெற்றுச் சாக்குள் 
நெல்மணி தேடும் 
நெரிசல்கள் 

ஓட்டை வீட்டுள் 
சாக்குப் போர்வையால் 
கூதலுக்கு 
டாட்டா காட்டும் 
சினஞ் சிறுசுகள் 

யார்சொன்னது 
எங்களை 
ஏழைகள் என்று


குரைக்கிறது 
 

நான் நினைத்திருக்கவில்லை 
அன்ரு 
இந்த வீதியால்தான் 
அந்த நாய் வாலை ஆட்டியது 
நான் அதற்கு 
எசமானன் அல்லன் 
ஆயினும் அது 
என்னைக்கண்டு வாலை ஆட்டும் 
நான் 
மனிதன். 
யார் தீனிபோட்டார்களோ 
என்னைக் கண்டுதான் 
அது 
குரைத்துக்கொண்டு 
ஓடுகின்றது 
எனது பயணங்கள் 
அதே வீதியில்தான் 
குரைக்கிறது 
கடிக்கவா போகிறது


இன்னும் என்ன  
 

உன்னை 
பார்த்துக்கொண்டே .. 
இருக்கலாம் 
ஒரு 
பகல் பொழுதின் 
ஆரம்பம்வரை 
-- 
உன்னை 
நினைத்துக்கொண்டே 
இருக்கலாம் 
என் 
நினைவுகள் 
உறங்கும்வரை 
--- 
நீ 
இல்லாமல் போனாலும் 
இருந்துவிட்டுப்போன இடம் 
இருப்பதாகவே இருக்கின்றதே 
இதை 
என்னவென்று சொல்வது... 
---- 
அன்னம் கூட 
தோற்றுப்போகும் 
உன் 
நடையைக்கண்டு 
நானோதோற்றுப்போனேன் 
உன் 
இடயைக்கண்டு 
--- 
வேலிக்குள் நின்று கொண்டு 
நீ...பார்ப்பதெல்லாம் 
வேடிக்கை அல்ல 
வேதனையைத்தான் 
அம்பு எய்தினால்கூட 
தாங்கிக்கொள்ளலாம் 
நீ 
எய்துவிட்டதோ 
அன்பை அல்லவா 
--- 
அன்புக்குரியவளே 
என் 
கனவில்தான் வந்தாய் 
நினைவெல்லாம் கொண்றாய் 
இன்னும் 
என்ன செய்வாயோ.


மரணம்  
 

எனது 
சுமைகளை 
இறக்குவதற்கு 
முன் 
என்னை 
சுமப்பதற்காக 
வந்துவிடுகிறார்கள்


நீ பேசாதே 
 

பட்டம் வேண்டும்..... 
என்க்கு 
ஒரு.. 
பட்டம் வேண்டும் 
புலவனாக இல்லாவிட்டாலும் 
ஒரு,, 
பாவலனாகவாவது,,, 
பட்டம்வேண்டும். 

நீ பேசாமல் போ 
என் ,,, 
பேனை பேசும் 
அது போதும் 
எனக்கு 
ஒரு 
பட்டம் வாங்க 

நீ சிரிக்காமல் இரு 
என்,,, 
சிந்தனையாவது 
சிறகடிக்கட்டும் 
ஒரு 
பட்டத்தையாவது நினைத்து 

நீ,,, 
பேசாமல் போன 
நாட்களும் 
சிரிக்காமல் விட்ட 
விநாடிகளும் 
பார்க்காமல் போன,,, 
நொடிகளும் 
சாட்சி சொல்லும் 
என் பட்டத்தின் 
ராணி 
நீ தான் என்று 

நீ,, 
பேசாதே,, 
பார்க்காதே 
சிரிக்காதே 
என்னை,,,, 
ஒரு 
பாவலனாக,, 
பொன்னாடை,,, 
போத்தும்வரை,,, 

ஏன் என்றால் 
உன்னை விட,,, 
அந்த,, 
நாட்களும் 
வினாடிகளும் 
நொடிகளும் 
ஏதோ 
பெறுமதியாய்,,, 
மறக்கவே,,,முடியாமல்,,,,,,



நட்பு ? 
 

வெளியே இல்லை 
எல்லாம் உள்ளே 
கைகோர்த்துநிற்கும் 
காலமெல்லாம்.. 
காலனுக்கும் சவால்விட்டு 

உள்ளுக்குள் இல்லை 
எதுவும், 
ஆனாலும் 
கைகட்டிநிற்கும், 
காலனுக்கும்..அழைப்புவிடும்.


ஒற்றூமைக் கீதம் 
 

நாங்கள் 
பூட்டில்லாவீட்டின் 
சொந்தக்காரர்கள் 

எங்கள் 
வீட்டுக்கதவுகள் 
தினமும்.. 
திருடர்களுக்காய் 
” நல்வரவு” பாடும் 
நிறைவேறா 
எங்கள் 
எதிர்பார்ப்புகளினிடையில்தான் 
பசி...பசி...பசி... 
வயிற்றுப்பசிக்காய் 
நாங்கள் 
கைநீட்டும்போது 
அவர்கள் 
கைபூட்டைக்கூட 
உடைத்துவிடுகிறார்கள் 

எங்களுக்குள்ளும் 
ஒற்றுமைகீதம் இசைக்க 
கவிஞர்கள்... 
இருக்கிறார்கள் 
.

ஓ...என் நண்பர்க்ளே 
 

ஓ..என் 
இனிய நண்பர்களே 
உங்கள் எதிரிகள் 
முத்தம் தருவதற்காய் 
ஏவுகணைகளை.. 
நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள் 

நீங்கள் 
உங்கள் 
அற்றுப்படுக்கைகளில் 
நாணல்களை 
வளர்த்துவிடுங்கள் 

தோட்டத்துள் 
மாடுகள் மேய்கிறதே 
அவைகளை பிடியுங்கள் 
கோரோசனைகளாவது 
கிடைக்கலாம் 

எதிர்காற்றுக்கு 
கோரோசனைகள் 
எரியாமலா 
போய்விடும் 
*

நீ 
 

மாலையிலே மலர்ந்தாய் நீ 
மனதினிலே நிறந்தாய் நீ 
சோலையிலே வளர்ந்தாய் நீ 
சுகம்தருவாய் கவிவானீ 
...*** 
பார்த்தவுடன் பறித்தள் நீ 
பார்வையிலே கொண்றவள் நீ 
சேதிஒன்று சொல்வாய் நீ 
சேர்ந்திடவே அருள்வாய் நீ 
**** 
காலையிலே கதிரவன் நீ 
மாலையிலே மதிபோல் நீ 
பாலையிலே நதிபோல் நீ 
நலம் தருவாய் நவராணீ 
** 
ஆழ்கடலில் முத்தாய் நீ 
ஆசைகொண்ட சொத்தாய் நீ 
ஓசை இல்லா மொழிதான் நீ 
பேசவந்த சிலைதான் நீ 
*



எப்போது 

உன்.. 
காந்த விழிகளை பார்த்தபோதெல்லாம் 
ஒரு காலத்தில் 
நான் 
எத்தனை கவிதைகளைத்தான் எழுதிவிட்டேன் 
;* 
நேற்று.. 
தற்செயலாய் நடந்த 
ந்மது சந்திப்பில் 
எனது 
கற்பனைகளெல்லாம் வறண்டு 
சில வினாடிகள்.. 
உன்னையே பார்த்துக்கொண்டு.. 
நான் மொளனமாகிக் கொண்டபோது 
நீ 
சிர்க்காமலே சென்றுவிட்டாய் 

சிரிப்பு.. 
உனக்குமட்டுமா 
வெளியில்.. 
எனக்கும்தான் எப்படிவரும் 
ந்மது 
விழிகளிலிருந்து 
சுயநலக்காரர்கள் 
என்றோ 
தூக்கத்தை கலைத்துவிட்டபோது.... 

ரசியமாய் இருக்கட்டும் 
எனக்கு இப்போதுதான் 
உன்னைப்பார்த்து 

சிரிக்கவேண்டும்போல்தான் இருக்கிறது 
அதுதான் 
எப்போது சிரிப்பது 
எப்போது கவிதை எழுதுவது