வெள்ளி, 23 நவம்பர், 2012





இந்த நிலவுடன் இணைந்து கொள்ள
உங்களையும்
இன்முகத்துடன் வரவேற்கிறேன்

எம்ஸீயே பரீத்












அவள் தே(ன்)ள்

கைப்பிடிக்கமுன்
தேன் என
இனித்தவள்தான்
கைப்பிடிக்குள்..
வந்தபிந்தான்
தெரிந்தது
அவள்..ஒரு
தேள்..என்று

சனி, 27 அக்டோபர், 2012

நீ சிரிப்பயா ?

உன் நினைவுகள்
அரும்பும் போதெல்லாம்
நான் தூங்கிப்போய்விடுகிறேன்
ஏனென்றால்...
தூக்கத்திலாவது உன்னை
தரிசிக்கமுடிகிறதே
..
யாரும் என்னை
பைத்தியம் என்று
சொல்லாதவரை
உன்னைக் காணவரும்
அந்த பாதையால்கூட
நான் ..
தூங்கிக்கொண்டேவருவேன்
சாத்தியமா என்ன
..
என்
சுகையீனத்துக்கு
மாத்திரைகளாய்
உன் புன்சிரிப்புகளையாவது
தந்துவிடு
...
மனம் கல்லாய்ப்போனவளே
சிரி
ஆனால் சிரிப்பால் ...
இவனைக் கொண்றுவிடாதே.



வியாழன், 25 அக்டோபர், 2012


விதியின் பாதையில்
வானொலியில் பொங்கும்பூம்புனல் போய்க்கொண்டிருக்கும் சுசான் கேற்றடியில்நின்றுகொண்டிருப்பான் ”காலை வெயிலில் நிறையவிட்டமின் “டி” இருக்கின்றது’ ஸ்கூலில் “ஹெல்த் மாஸ்டர் சொல்லியதை தன் மேனி இலேசாக சுடும்போது அவன் நினைத்துக்கொள்வான். இன்னும் ஒருபாடல் முடிவதக்குள் வந்துவிடுவாள் இப்படி அவன் நினைத்துக்கொண்டு சுவருக்கு ஒற்றைக்காலை உதை கொடுத்த வண்ணம் சாய்ந்து நிற்கும்போது-
அவள் சுஹைறா –“இண்டைக்கு ஸ்கூலுக்கு போவதில்லை” என்றமுடிவுடன் வீட்டில் முகம் கழுவாமலே நின்றிறுக்கக்கூடும்.
குறைந்தது எட்டுமணி வரை நின்றிருப்பான். ஏனென்றால் இவனைக் கடந்துதான் அவள் ஸ்கூலுக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில், எத்தனை நாட்கள்தான் இவனது நம்பிக்கைகள் கைகூடாமல் விட்டிறுக்கின்றன. இருந்தும் இவன் அவளைத்தான் நம்பிக்கொண்டு –சிலவேளை நடைப்பிணமாகிவிடுவதும் உண்டு.

சென்றமுறை க பொ த உயர்தரப் பரிட்சைக்கு தோற்றியவர்களின் பட்டியலில் இவனும், இம்முறை தோற்ற இருப்பவர்களின் பட்டியலில் அவளும் இவ்வளவுதான் அவர்களுக்கிடையேயுள்ள இடைவெளி வித்தியாசம் எல்லாம்-

மற்றும்படி ஆரம்பக் கல்வி எல்லாம் இருவருக்கும் ஒரேஇடமாகஇயிருந்தபோதும் வயதில் மூத்தபடி இவன் முந்திக்கொண்டான்.
ஒரு நாள் –இவன் பத்தாம் வகுப்பில் இருக்கும்போது பாடசாலை வளவுள் நிறையமாங்காய்கள் காய்த்திருந்தன “களவில்மாங்காய் பறிப்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும்” அதிபரின் கடுமையான எச்சரிக்கைகளுக்கு பெயர்போனகாலமது.கேட்டுப்பறிப்பதைவிட களவில்பறிப்பதுதான்ருசி அதிகம் இப்படிமாணவர்களுக்கிடையே ஒரு அபிப்பிராயம்.ஏனென்றால் கேட்டால் தரவா போகிறார்கள் என்ற நம்பிக்கை.
அன்று மாலைநேர வகுப்புக்கு இவன் வழக்கத்தைவிட சற்று நேரத்தோடு வந்திருந்தான்.அதேஅன்று சுஹைறாவுக்கும் மாலைவகுப்பு.அவளும் இவனைப்போலத்தான் வருகைக்கு முந்தி.தனியே ஏதோ புத்தகத்தை புரட்டிக்கொண்டு வகுப்பறைக்குள் இருந்ததை இவன் கண்டிருக்கநியாயம் இல்லைதான்.
அவளைக்கண்டிருந்தால் அவளது வகுப்பறைக்குப் பக்கத்தில் காய்த்திருந்த மாமரத்தில் இவன் களவு செய்ய இடம்மிருந்திருக்காது. என்ன செய்யலாம்.
இவன் மரத்துக்குக் கீழ் கையை உயர்த அவள் சிரித்துவிட்டாள்.அந்த சிரிப்போடு ஒடுங்கி ஓடிப்போனவந்தான். நாளடைவில்-ஆண்களைக்கண்டால் பெண்களுக்கு ஏற்படும் நாணம்-அவனுக்கு அவளைக்கண்டால் ஏற்படும்.

இன்னும் ஒருநாள்-அது அவன் பாடசாலையை விட்டு விடைபெறும் கடைசிநாள்.விடைபெறும் மாணவர்களுக்கு விருந்தளித்து.கௌரவிக்க ஏனைய வகுப்பு மாணவர்கள் அக்கறையுடனும்,சுறுசுறுப்புடனும் ஒரு புப்றமிருக்க பிருந்துசெல்லும் மாணவர்கள், ஒருவருக்கொருவர் கட்டிஅணைத்தும்.கை கோர்த்தும்,சிரித்துக்கும்மாளமடித்துக்கொண்டும்,இன்னும் சிலர் அழுதுகொண்டும்........’
;இன்று நேரம் என்ன கெதியாகத்தான் ஓடுகிறது “சிலர்முணுமுணுத்துக் கொண்டர்கள்.
பாடசாலையின் முன்னேற்றம்பற்றி,அதற்காக மணவர்களின் ஒத்துழைப்பு பற்றி,விளையட்டுப்போட்டி என்றாலும் சரி,நாடகப்போட்டியென்றாலும் சரி,எதிலும் அக்கறையுடன் ஈடுபட்டு பாடசாலைக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கமுடியுமோ அதுபற்றி – எதிர்காலத்தில் கல்வி வளர்சிபற்றி இப்படி எதுவெதுவெல்லாம் பேசி அதிபர் பேச்சை முடித்து கொள்ள பிரிந்து செல்ல்லும் மணவர்களின் பேச்சுக்கள், ஆடல்கள் பாடல்கள் இப்படி ஒவ்வொன்றாக மேடை ஏறிக்கொண்டிருந்தன.
மேடையில்- ஆணித்தரமாக பேசியவர்கள் ஒருபுறம் பேசமுடியாமல் வாயடைத்துப்போய் அழுதவர்கள் ஒருபுறம் மேடையில் வந்து சிரித்துவிட்டு இறன்கிக்கொண்டவர்கள் ஒருபுறம்-
பாடவந்த.சுசான் மட்டும் எதுவித சலனமும் இன்றி ”பசுமை நிறைந்த நினைவுகளேபாடித் திரிந்த பறவைகளே...பறந்துசெல்கின்றோம்”
அந்த சினிமாப்பாடலை பாடி முடித்தவனுக்கு அழுகையை அடக்க முடியாமல் தன்இருக்கைக்கு
வந்தவனை சுஹைறா இமைவெட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
எதிர்பாராமல்-அவர்களது பார்வைகள் சங்கமித்துக்கொள்ள அவளைக் கண்டால் அவனுக்கு ஏற்படும் அந்த நாணம் எங்கு சென்றதோ தெரியவில்லை.
சில வினாடிகள் பார்த்துக்கொண்டே இருந்தார்க்ள்,அங்கு-அவரவர் கைக்குட்டைகளுக்கு நிறைய வேலைஇருந்தது.
“ஏன் அப்படி அவள் என்னைப்பார்த்தாள் அந்தக்கேள்விக்கு விடைஇல்லாமலேநாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதுமட்டுமா “ஏன் அன்று பார்த்தவள் என்னைக்கண்டதும் இப்போதெல்லாம் தலைகுனிந்துவிடிகிறாள்” என்ற வினாவுக்குக்கூட விடை இன்றியே அவன் வீதியில் பொன்கும் பூம்புனலுக்கு காதுகொடுப்பான்
காலமாற்றம் மனித வாழ்வில்.எத்தனை மாற்றன்களைத்தான் ஏற்படுத்திவிடுகின்றது.வகுப்பில் இருந்த கெட்டித்தனம் பரீட்சையில் இன்றித்தோற்றுப்போனவன், குடும்பப் பொறுப்பை ஏற்க முடியாமல் பாயில்விழுந்த தந்தையை நினைத்துக் கண்ணீரானான்.
யா அல்லாஹ்....என்னை நம்பியே ஒரு தன்கை என்க்கு ஏதாவது வழிகாட்டு” அவனது பிரார்தனைக்கு அவன் மத்தியகிழக்கில்ரூம்போய்” ஆக வேண்டியதாயிற்று.
“நீங்க இந்தமருந்தைக்கொடுங்க எல்லாம்சரியாப்போய்விடும்.உங்களூகு முடியுமெயன்றால் உங்கட மகண்டபோன்நம்பரைத் தாருன்கள் நானே விபரமாக அவருக்கு எல்லாத்தையும் சொல்லிறன்..
“போன் நம்பரை எடுத்துக்கொண்டவளுக்கு பேசுவதற்கு ஒரு நல்ல தினத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில்தான் அவள் எதிர்பாராமலே அவனிடமிருந்து போன் வந்தது .
வீட்டில் எல்லாவறையும் விபரமாகசொன்னார்கள் வாப்பாவின் வருத்தத்தய்ப் பற்றி தான்கள் எனக்கு அறிவிப்பதாக உம்மாவிடம் சொல்லியிருந்தும் சிலவேளை தன்களூக்குநேரமின்றிப்போனால்
....அதனால்தான் நான் பேசுகிறேன்
சில வினாடிகள் இவளுக்கு ஒன்றுமேபுரியவில்லை தன்னை ஒருவாறுசமாளித்துக்கொண்டு அவனுடன் பேசினாள் மீண்டும் நாளை நான்பேசுகிறேன் என்று அவன் மறுமுனையில் சொன்னபோது இவள் தன்னையே மறந்துபோனாள்..”பாவம் சுசான் பாடசாலையில் எவ்வளவோகெட்டிக்காறன், என பெயர் எடுத்தும் வாழ்க்கையில்...... கலன்கிய கண்களை கசக்கிக்கொண்டாள்.
எனக்கு ஏன்கண்கலங்குகின்றது.இப்போதுஎன்னநடந்துவிட்டது இதுதான் காதலோ புரியாதவளாய் தடுமாறினாள்.
அங்கு- சுசான் தனியே யோசிப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதும், நன்பர்களுக்கு பதில் சொல்லவேண்டியிருந்தது.
ஒரு காலத்தில் உங்களையே அடையவேண்டும் என்று நான் எனக்குள்ளேயே எவ்வளோவோ கற்பனைகளை வளர்த்தேன்.எனது எண்ணங்களும் கற்பனைகளும் நிச்சயமாக உங்களுக்கு தெரிந்துருக்க நியாயமில்லைதான்.
இருந்தும் தெரியாமல் போய்விட்டதே என்பதை நினைக்கும்போது நான் இப்போதும் கூட மிகவும் சந்தோசப்படுகிறேன். ஏன்தெரியுமா வாழ்க்கையைப் பற்றிபுரியாத அந்த வயதில் அந்த எண்ணம் எனக்கு மட்டுமல்ல எவருக்கும் ஏற்படுவது இயற்கைதான்.
ஒருவேளை எனது அந்த எண்ணங்களுக்கு தாங்கள் இடம்வைத்திருன்த்தால் சிலவேளை கண்ணீருடன்தான் வாழ வேண்டியநிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம்.அதுவரையில் நான் மட்டுமல்ல தாங்களும் கொடுத்துவைத்தவர்தான்.
எது எப்படி இருந்தபோதும் நான் தங்களை மனதில் நினைத்துக்கொண்டதுபோல் தாங்களும் என்னை நினைத்துக்கொண்டுதான் எத்தனையோ நாட்களை மெளனமாக்கி விட்டிருக்கின்றீர்கள் என்பதை தங்களுடன் பேசியஒருசிலவினாடிகளுக்குள் தெரிந்துகொண்டேன்
முதலில் என்னை மன்னிக்கவேண்டும் ஏன் தெரியுமா வேலையின்றி வெளிநாட்டில் ”ரூம் போய்”யாக இருக்கும் ஒருவனுக்கும் பிறந்தமண்ணிலேயே பிரசித்தி பெற்று விளன்கும் ஒரு “டொக்டருக்கும் திருமணம் என்றால் இதை யார் ஏற்றுக்கொள்ளப்போகின்றார்கள்.
இந்த சமூகம்தான் சும்மா விட்டுவிடுமா இந்த சின்னவிடயத்தைக் கூட புரியாமல் ஏன் அப்படி ஒரு முடிவிக்கு வந்தீர்கள் என்பதுதான் எனக்குப்புரியவில்லை.
எதிர்பாராமல் அவனிடமிருந்து வந்த மடலை எத்தனைமுறை படித்திருப்பாளோ தெரியவில்லை நான் திருமணம் முடிப்பதாஇருந்தால் தங்களய்த்தான்” என்பதைமட்டும் உருக்கமாகஒரு பதிலாகஎழுதியிருந்தாள்.
இந்தப் பணம்இருக்கின்றதே எவனையாவது விலைக்குவாங்கிவிடலாம் என்பதற்கு ஆதாரமாய் கூடப்பிறந்த சகோதரன் இன்றீயே தாலியை சுமந்தாள் தங்கை.எது எப்படி இருந்தபோதும் தங்கைக்கு வாழ்வு கிடைத்துவிட்ட திருப்தியில் ஆனந்தக்கண்ணீரானான் சுசான்.
பதிலுக்குப் பதில் அவர்களிடையே ஒரு சில மடல்கள் பரிமாறிக்கொண்டன கடைசியில் .....”எல்லாத்திற்கும் மனம்தான் காரணம். கணவனுக்கு தொழில் இல்லைஎன்று எவர் சொன்னாலும் பரவையில்லை......
உங்களுக்குத்தெரியுமா இந்த உலகத்திற்கு பழிசொல்லத்தான் தெரியும் வழி சொல்லத்தெரியாது....அடுதத பதிலாவது எனக்கு ஒரு வழிசொல்லட்டும்” என முடித்த அவளது பதிலில் அவன் தோற்றுப்போனான்.
இன்னும் ஆறுமாதத்தால் நான் வந்துவிடுவேன் அதுவரைபொறுமை தேவை”என்ற பதிலைக்கண்டு மனம் பூரித்தாள் அவள்.
;எனக்கு இப்போதுதான் நிம்மதி ம்கிழ்ச்சி எல்லாம் வீட்டில் ஆரம்பத்தில் என் முடிவை வாப்பா கடுமையாக எதிர்த்தார்.
அந்த எதிர்ப்பு இரண்டு நாள் கூட நிலைக்கவில்லை கடைசியில்
வாப்பாசொன்னார்-
‘மகள் நமக்கு காணி,காரு,காசி,வங்களா,இப்படி எல்லா வசதியும்இருக்கு.அவர் நமது காணிகளைபார்த்துக்கொண்டாலேபோதும் ஏன் ஆறு மாதம் செல்லவேண்டும் உடன் வரச்சொல்லி ஒரு கோள் எடு மகள்...என்றார்.
ரூமில் தூங்கப்போனவனுக்கு தூக்கமேவரவில்லை ’ஊங்கள் விருப்பம் எப்படியோ அப்படியே’ என்று மட்டும் சொல்லிவிட்டுவரப்போகும் பொய்யான தந்திக்காக் காத்துக்கொண்டிருந்தான்சுசான்.
விதியாரைத்தான் விட்டது
தங்கைக்கு பிறக்ப்போகும் குழந்தையை நினைத்து விதவிதமான உடுப்புகள்,விளையாட்டுப் பொருட்கள்,இது....உம்மாவிற்கு...இது…..வாப்பாவிற்கு.....இது............த ங்கைக்கு இது....மச்சானுக்கு....இது...எத்தனையோ விலையுயர்ன்ந்த பொருட்களுடன் ரூமுக்கு வந்தவனை தந்தி ஒன்று காத்துக்கொண்டிருந்தது.
:உங்கள் தங்கையின் கணவருக்கு கடும் சீரியஸ் உடன் வரவும்”சுஹைறாதான் அனுப்பியிருந்தாள் மனதிக்குள் சிரித்துக்கொண்டவன் விமானத்தில் ஏறிக்கொண்டான்.
“பாவம்....தன்ரகுழந்தட முகத்தை பார்க்காமலே....எல்லாம் அந்த மோட்டார் சைக்கில்காரண்டபிழைதான் சைகில்லஏறினா பிளேன்லபோற நெனப்பு.....ஊரார் கதைத்துக்கொண்டார்கள்....மையத்தை அடக்க இவனுக்காக காத்துக்கொண்டிருபதையும் வழ்விழந்த தங்கைமயக்கமுற்றுக் கிடப்பதையும் இவனது வரவுக்காகவே...சிரிக்கவேண்டியவர்கள் வாடிப்போய் நிற்பதையும் அவன் அறிந்திருக்க நியாயமில்லைதான்.


புதன், 24 அக்டோபர், 2012

<!-My calendar widget - HTML code - mycalendar.org --><div align="center" style="margin:15px 0px 0px 0px"><noscript><div align="center" style="width:140px;border:1px solid #ccc;background:#fff ;color: #fff ;font-weight:bold;"><a style="font-size:12px;text-decoration:none;color:#000 ;" href="http://mycalendar.org/"> Calendar</a></div></noscript><script type="text/javascript" src="http://mycalendar.org/calendar.php?group=&widget_number=3&cp3_Hex=FFB200&cp2_Hex=040244&cp1_Hex=F9F9FF&fwdt=140&lab=1"></script></div><!-end of code-->


--------------------------------------
எண்ணி முடிப்பதற்குள்
நாட்கள்
வந்துதுவிடும்
சொல்லாமலே..பக்கத்தில்
/
நேரம் காட்டி
விசி யாக இருக்கும்
ஒரு
விடாடிகூட..
இரவல் தராமல்
/
இமைகள் கூட
இயங்க மறுக்கும்.
பக்கத்தில் இருப்பவர்கள்
இயக்கம் கொடுப்பார்கள்
மூடுவதற்கு
/
சொந்த பந்தங்கள்
நிலைகுலைந்து நிற்கும்
இவன் நிலைகண்டு.
நாளையும் எமக்கு
என்மதை
ஞாபகத்தில் வைத்துக்கொள்வார்கள்
இவனின்..புதைகுளிவரை
/
இல்லங்கள் பேசும்
சில மன்னிப்புகள் உயிர்பெறும்
சிலர்
காயங்களை சுரண்டிப்பார்ப்பார்கள்
ஆறாம் அறிவை தொலைத்தவர்களாக
/
மனிதர்களா
இவர்கள்
காயப்பட்ட நாய் கூட
கண்ணீர் சிந்தும்
ஒருநாள்போட்ட..பசிக்காய்
கதறியும் அழும்
ஏன்
உயிரையும் விடும்
/
நாட்கள் நகரும்
ஆண்டுகள் பிறக்கும்
நினைவுகள் நாழிதலோடும்..
நாவுகளோடும்
மட்டுப்படுத்தப்படும்
நான் என்று
வாழ்பவன்
நாம் என்று
வாழாதவரை.

சனி, 31 மார்ச், 2012


மரணம்  

எனது 
சுமைகளை 
இறக்குவதற்கு 
முன் 
என்னை 
சுமப்பதற்காக 
வந்துவிடுகிறார்கள்



இன்னும் என்ன  

உன்னை 
பார்த்துக்கொண்டே .. 
இருக்கலாம் 
ஒரு 
பகல் பொழுதின் 
ஆரம்பம்வரை 
-- 
உன்னை 
நினைத்துக்கொண்டே 
இருக்கலாம் 
என் 
நினைவுகள் 
உறங்கும்வரை 
--- 
நீ 
இல்லாமல் போனாலும் 
இருந்துவிட்டுப்போன இடம் 
இருப்பதாகவே இருக்கின்றதே 
இதை 
என்னவென்று சொல்வது... 
---- 
அன்னம் கூட 
தோற்றுப்போகும் 
உன் 
நடையைக்கண்டு 
நானோதோற்றுப்போனேன் 
உன் 
இடயைக்கண்டு 
--- 
வேலிக்குள் நின்று கொண்டு 
நீ...பார்ப்பதெல்லாம் 
வேடிக்கை அல்ல 
வேதனையைத்தான் 
அம்பு எய்தினால்கூட 
தாங்கிக்கொள்ளலாம் 
நீ 
எய்துவிட்டதோ 
அன்பை அல்லவா 
--- 
அன்புக்குரியவளே 
என் 
கனவில்தான் வந்தாய் 
நினைவெல்லாம் கொண்றாய் 
இன்னும் 
என்ன செய்வாயோ.



நீ பேசாதே - Others

நீ பேசாதே 

பட்டம் வேண்டும்..... 
என்க்கு 
ஒரு.. 
பட்டம் வேண்டும் 
புலவனாக இல்லாவிட்டாலும் 
ஒரு,, 
பாவலனாகவாவது,,, 
பட்டம்வேண்டும். 

நீ பேசாமல் போ 
என் ,,, 
பேனை பேசும் 
அது போதும் 
எனக்கு 
ஒரு 
பட்டம் வாங்க 

நீ சிரிக்காமல் இரு 
என்,,, 
சிந்தனையாவது 
சிறகடிக்கட்டும் 
ஒரு 
பட்டத்தையாவது நினைத்து 

நீ,,, 
பேசாமல் போன 
நாட்களும் 
சிரிக்காமல் விட்ட 
விநாடிகளும் 
பார்க்காமல் போன,,, 
நொடிகளும் 
சாட்சி சொல்லும் 
என் பட்டத்தின் 
ராணி 
நீ தான் என்று 

நீ,, 
பேசாதே,, 
பார்க்காதே 
சிரிக்காதே 
என்னை,,,, 
ஒரு 
பாவலனாக,, 
பொன்னாடை,,, 
போத்தும்வரை,,, 

ஏன் என்றால் 
உன்னை விட,,, 
அந்த,, 
நாட்களும் 
வினாடிகளும் 
நொடிகளும் 
ஏதோ 
பெறுமதியாய்,,, 
மறக்கவே,,,முடியாமல்,,,,,,


மொத்த தேர்வு : 0



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல்தேடல்
'கோகிலம்' இலங்கைகிழக்கு மாகாணத்தின்கல்முனைசாய்ந்தமருதுபிரதேசத்திலிருந்து வெளிவந்த காலாண்டுச் சஞ்சிகை. மொத்தம் ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் படைப்பிலக்கியத் துறையில் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சிற்றிதழாகக் குறிப்பிடலாம்.

பொருளடக்கம்

[தொகு] வெளிவந்த இதழ்கள்

முதலாவது இதழ் 1983 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலும், இறுதி இதழ் (ஆறாவது இதழ்) 1984செப்டம்பர் மாதத்திலும் வெளிவந்தது.

[தொகு] நிர்வாகம்

பிரதம ஆசிரியர்: எம்ஸியேபரீத். துணை ஆசிரியர்: தம்விலுவிலைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி சபாரெத்தினம் (தம்பிலுவில் ஜெகா) இச்சஞ்சிகை கல்முனை சாய்ந்தமருது எனும் முகவரியைக் கொண்டிருந்தது.

[தொகு] உள்ளடக்கம்

இலக்கிய கட்டுரைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், நூல்நயம், வாசகர் பக்கம், கேள்வி பதில், சமயம், கலாசாரம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. கோகிலம் தனது 3வது இதழுடன் உருவ அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தன்னை விரிவாக்கிக் கொண்டது. கோகிலம் 5ல், இதயராகம் பேட்டி, ஆங்கிலம் கற்போமா? போன்ற அம்சங்கள் உள்ளடங்கின.

[தொகு] இதில் எழுதியோர்

மா.சந்திரலேகா, மசுறா ஏ. மஜீட், மருதூரான், எஸ். எம். எம். ராபிக், இப்னு அஸமத், அன்பிதயன் சிராஜ், பாரதிபுரம் வி.நடனசேகரம், ராதிகா குமாரசாமி, பரந்தன் செவ்வந்தி, மகாலிங்கம், பாண்டிருப்பு நாகராஜா, சாய்ந்தமருது ஆர். எம். நௌஸாத், மூதூர் சிராஜ், பரந்தன், கலைப் புஸ்பா, ஈழதாசன், காரைதீவு வீ. சிவபாலன், கலீல், சோலைக்கிளி, ப. ஜெகதீசன், ஒலுவில் அமுதன், கின்னியா அமீர் அலி

உன் கரங்களை எடுத்துவிடு

 என் பார்வைகளை
பிடிக்காமலா
நீ...
அந்த புத்தகங்களை..
சுமந்து செல்கிறாய்
உன்
கரங்களை எடுத்துவிடு
நான்
அவைகளை
பிடித்துக்கொள்கின்றேன்.