புதன், 24 அக்டோபர், 2012



--------------------------------------
எண்ணி முடிப்பதற்குள்
நாட்கள்
வந்துதுவிடும்
சொல்லாமலே..பக்கத்தில்
/
நேரம் காட்டி
விசி யாக இருக்கும்
ஒரு
விடாடிகூட..
இரவல் தராமல்
/
இமைகள் கூட
இயங்க மறுக்கும்.
பக்கத்தில் இருப்பவர்கள்
இயக்கம் கொடுப்பார்கள்
மூடுவதற்கு
/
சொந்த பந்தங்கள்
நிலைகுலைந்து நிற்கும்
இவன் நிலைகண்டு.
நாளையும் எமக்கு
என்மதை
ஞாபகத்தில் வைத்துக்கொள்வார்கள்
இவனின்..புதைகுளிவரை
/
இல்லங்கள் பேசும்
சில மன்னிப்புகள் உயிர்பெறும்
சிலர்
காயங்களை சுரண்டிப்பார்ப்பார்கள்
ஆறாம் அறிவை தொலைத்தவர்களாக
/
மனிதர்களா
இவர்கள்
காயப்பட்ட நாய் கூட
கண்ணீர் சிந்தும்
ஒருநாள்போட்ட..பசிக்காய்
கதறியும் அழும்
ஏன்
உயிரையும் விடும்
/
நாட்கள் நகரும்
ஆண்டுகள் பிறக்கும்
நினைவுகள் நாழிதலோடும்..
நாவுகளோடும்
மட்டுப்படுத்தப்படும்
நான் என்று
வாழ்பவன்
நாம் என்று
வாழாதவரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக